சென்னை, இந்தியா, 19 செப்டம்பர் 2025: உலகின் முன்னணிஏர் கம்பிரஸர் உற்பத்தியாளர்களில் ஒன்றான எல்ஜிஎக்யூப்மென்ட்ஸ் (BSE: 522074 NSE: ELGIEQUIP), Demand=Match எனப்படும் புரட்சிகரமான புதியதொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அமைப்பு, மாறிக்கொண்டிருக்கும் தேவைகளின் சூழலில்நிலையான ஸ்பீடு கம்பிரஸர்கள் இயங்கும் விதத்தை முற்றிலும்மாற்றுகிறது. நுண்ணறிவு அடிப்படையிலான இந்ததொழில்நுட்பம், கம்பிரஸர் உள்புற காற்றோட்டத்தைசாமர்த்தியமாக மீளச் சுழற்றி, உற்பத்தி நிலையத்தின் உடனடிதேவைக்கேற்ப விநியோகத்தை தானாகச் சீரமைக்கிறது. இதன்மூலம் விநியோகம் எப்போதும் தேவைக்குச் சமமாக இருக்கும்.இதன் விளைவாக, VFD-க்கு இணையான ஆற்றல் சேமிப்புகிடைக்கிறது; அதேசமயம் நிலையான ஸ்பீடு கம்பிரஸர்களின்எளிமையும் வலிமையும் தொடர்கிறது.
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகஇயக்குனர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் கூறுகையில்:“ஒவ்வொரு தொழிற்சாலையிலும் கம்பிரஸ் செய்யப்பட்டகாற்று நான்காவது அடிப்படை பயன்பாடாகும். ஆனால், தேவைகள் ஒருபோதும் நிலையாக இருப்பதில்லை. பெரும்பாலான தொழிற்சாலைகள் நிலையான ஸ்பீடுகம்பிரஸர்களையே பயன்படுத்துகின்றன. அவை தேவைகள்குறைந்தபோதிலும் ஒரே மாதிரியான உற்பத்தியைத்தொடர்ந்து வழங்குகின்றன. எல்ஜி–யின் Demand=Match அமைப்பு இவ்வகை இயந்திரங்களுக்கு நுண்ணறிவைஅளிக்கிறது. இது தானாகவே உடனடி தேவைக்கேற்பவிநியோகத்தைச் சீரமைத்து, வாடிக்கையாளர்களுக்குமின்சாரச் செலவைக் குறைத்து, கூடுதல் செலவு இன்றிஇயந்திரத் திறனையும் ஆயுளையும் மேம்படுத்துகிறது,” என்றார்.
சிக்கல் : நிலையான உற்பத்தி Vs மாறும் தேவை
பெரும்பாலான தொழிற்சாலைகளில் காற்றுத் தேவைகள்நிமிடம் தோறும், பணி முறை தோறும் மாறிக்கொண்டேஇருக்கின்றன. ஆனால் நிலையான வேகக் கம்பிரஸர்கள், cut-in மற்றும் cut-out அழுத்த எல்லைகளுக்கு இடையில் சுழற்சிசெய்வதன் மூலம் மட்டுமே பதிலளிக்கின்றன.
இதன் விளைவாக:
• அதிகப்படியான மின்சார இழப்பு
• தேவையற்ற அழுத்த அதிகரிப்பு
• அடிக்கடி சுழற்சிகள் காரணமாக கூறுகளில் அதிகமெக்கானிக்கல் அழுத்தம்
• அதிகப்படியான இயக்கச் செலவுகள் மற்றும் குறைந்த ஆயுள்
தீர்வு : Demand=Match தொழில்நுட்பம்
எல்ஜி–யின் Demand=Match தொழில்நுட்பம், தொழிற்சாலையின் உடனடி தேவைக்கேற்ப விநியோகத்தைதானாகச் சீரமைக்கிறது. கம்பிரஸர் உள்புற காற்றோட்டத்தைமீளச் சுழற்றி, விநியோகம் எப்போதும் தேவைக்குச் சமமாகஇருப்பதை உறுதிப்படுத்துகிறது. இதனால்,
• தேவையற்ற சுழற்சிகள் குறைகின்றன
• அழுத்தம் நிலையாக பராமரிக்கப்படுகிறது
• ஆற்றல் திறன் மேம்படுகிறது
வாடிக்கையாளர்களுக்கான முக்கிய நன்மைகள் :
• மின்சாரச் சேமிப்பு : வழக்கமான இயக்க நிலைகளில்அதிகபட்சம் 17% வரை மின்சாரச் செலவு குறைவு(சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது).
• நம்பகத்தன்மை : குறைந்த cut-in மற்றும் cut-out சுழற்சிகள்மூலம் மெக்கானிக்கல் அழுத்தம் குறைகிறது.
• செலவு திறன் : கூடுதல் முதலீடு இல்லாமல் நீண்டகாலஇயந்திர ஆயுள்.
• திறைத்தன்மை : குறைந்த மின்சாரப் பயன்பாடு, நேரடியாகக்குறைந்த CO₂ உமிழ்வாக மாறுகிறது.
• உத்தரவாதம் : EG தொடருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுஉத்தரவாதம்; EQ தொடருக்கு 5 ஆண்டு உத்தரவாதம்.
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்தலைவர் (Product Excellence & Innovation) டாக்டர் கே. வேணு மாதவ் கூறுகையில் , “இந்த அமைப்பு அழுத்தத்தைதொடர்ந்து கண்காணித்து, காற்றோட்டத்தை நுண்ணறிவு மீளச்சுழற்சி மூலம் சீரமைக்கிறது. இதனால் தொழிற்சாலைக்குதேவையான அளவு காற்றே துல்லியமாக வழங்கப்படுகிறது. இதுஇயந்திரத்தை மென்மையாக இயங்கச் செய்து, மின்சாரச்செலவையும் குறைக்கிறது,” என்றார்.
இந்த அறிமுகம், வாடிக்கையாளர்களின் மொத்த சொத்துஉடமைச் செலவை (Total Cost of Ownership) குறைக்கும்வகையில் வேறுபட்ட, மதிப்பு சார்ந்த தீர்வுகளை வழங்கும்எல்ஜி–யின் நீண்டகால வணிகத் திட்டத்துக்கு ஒத்துப்போகிறது.திறன்தன்மையை எளிமையாகவும், மலிவாகவும் ஆக்குவதன்மூலம், நூற்பாலை, வாகன உற்பத்தி, மருந்துகள், உணவு & பானம், மின்னணுவியல் மற்றும் பொது பொறியியல் போன்றதுறைகளில் விரைவான தழுவலை எல்ஜி ஊக்குவிக்கிறது.
ELGi Demand=Match தற்போது இந்தியாவில் EG மற்றும் EQ தொடரில் தொழிற்சாலையிலேயே முன்பாக பொருத்தப்பட்ட(factory-fit) வகையில் கிடைக்கிறது. விலை மற்றும்மறுஅமைப்பு (retrofit) தொடர்பான தகவல்கள் தங்கள்அருகிலுள்ள எல்ஜி பிரதிநிதிகளிடமிருந்து பெறலாம்.
