சென்னை, 20 செப்டம்பர் 2025
ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் 16-வது பட்டமளிப்பு விழா 2025 செப்டம்பர் 20 அன்று, சென்னை படூரில் அமைந்துள்ள பே ரேஞ்ச் கல்வி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. எரித்ரியா நாட்டின் தூதர்மற்றும் தூதரக அதிகாரிகளின் (இந்தியா) டீன் மாண்புமிகு அலெம் செஹாயே வோல்டெமரியம் அவர்கள், தலைமை விருந்தினராக இந்நிகழ்வில் பங்கேற்றார். நாஸ்காம் அமைப்பின் தலைவர் திரு. ராஜேஷ் நம்பியார், கடல்சார் அறிவியல் & தொழில்நுட்ப ஆய்வகம் (NSTL), DRDO-ன் இயக்குநர் டாக்டர். ஆப்ரகாம் வர்கீஸ், சென்னை கிளெனீகில்ஸ் ஹெல்த் சிட்டியின் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையின் இயக்குநர் டாக்டர். C. இம்மானுவேல் ஆகியோர், ஒவ்வொரு ஆண்டும் HITS நடத்தும் அதிக கவுரவமிக்க நிகழ்வானஇப்பட்டமளிப்பு விழாவில் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மகிழ்ச்சிமிக்க கொண்டாட்டமாக நடைபெற்ற இந்நிகழ்விற்கு இப்பல்கலையின் வேந்தர் டாக்டர். ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் தலைமை வகித்தார். HITS பல்கலையின் நிர்வாக அதிகாரிகளும், பேராசிரியர்களும் பட்டம் பெறும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பொறியியல், கட்டுமானக்கலை, மேலாண்மை, அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவியல்கள், கலை மற்றும் அறிவியல், சுகாதார அறிவியல் மற்றும் ஹிந்துஸ்தான் ஆன்லைன் – CODEஆகியவை உட்பட பல்வேறு துறைகளில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் முனைவர் கல்வி திட்டங்களில் தேர்ச்சி பெற்ற 2500-க்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்நிகழ்வில் பட்டங்கள் வழங்கப்பட்டன.பெருமகிழ்ச்சியோடும், பெருமையோடும் தங்கள் பட்டங்களை இம்மாணவர்கள் பெற்று கொண்டனர். பட்டமளிப்பு விழாவின் தலைமை விருந்தினரும் மற்றும் பல்கலையின் வேந்தரும் மாணவர்களுக்கு இப்பட்டங்களையும் மற்றும் முதன்மை இடம் பிடித்த சாதனையாளர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கி கவுரவித்தனர்.
இப்பட்டமளிப்பு நிகழ்வின்போது அதன் தலைமை விருந்தினராக பங்கேற்ற மாண்புமிகு அலெம் செஹாயேவோல்டெமரியம் அவர்களுக்கு கவுரவ டாக்டர் (Doctor of Letters) பட்டம் வழங்கப்பட்டது; கலாச்சாரம், சமாதானம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றில் இவர் வழங்கிய மிகச் சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக இப்பட்டத்தை இப்பல்கலைக்கழகம் வழங்கியிருக்கிறது. அத்துடன், டிஜிட்டல் மேம்பாட்டுக்கான மாற்றத்தில் 30 ஆண்டுகால நேர்த்தியான பங்களிப்புக்காக திரு. ராஜேஷ் நம்பியார், தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய ஆராய்ச்சியில் சிறப்பான சாதனைகளுக்காக டாக்டர். ஆப்ரகாம் வர்கீஸ் மற்றும் சுகாதார பராமரிப்பை மேம்படுத்துவதில் பங்களிப்பு மற்றும் தலைமைத்துவத்திற்காக டாக்டர். C. இம்மானுவேல் ஆகியோருக்கும் கவுரவ முனைவர் பட்டங்களை (Doctor of Science) இப்பல்கலைக்கழகம் வழங்கி கவுரவித்தது.
16-வது பட்டமளிப்பு விழா நிகழ்வின் ஒரு அங்கமாக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் NM-ICPS, iHub – AwaDH, ஐஐடி ரோபார் ஆகியவற்றின் கூட்டாண்மையோடு CPSL (இணைய இயற்பியல் அமைப்புகள் ஆய்வகம்) என்பதையும் இப்பல்கலைக்கழகம் தொடங்கி வைத்திருக்கிறது. இப்பல்கலையில் நிறுவப்பட்டிருக்கும் இந்த ஆய்வகம், வேளாண் செயல்பாடுகளை தானியக்கமாக்கல், தகவல் அமைப்புகள், நீர் சுத்திகரிப்பு, தொழில்நுட்பங்கள் ஆகியவற்றோடு தொடர்புடைய பல்வேறு கல்விப் பிரிவுகளில் பிரிவுகளைச் சேர்ந்த இளங்கலை பட்டப்படிப்பு ஆராய்ச்சி பணிக்கல்வி (இன்டெர்ன்) மாணவர்கள் மற்றும் இளநிலை ஆராய்ச்சி அறிவியலாளர்களுக்கு நேரடி பயிற்சியையும் மற்றும் ஆராய்ச்சி அனுபவத்தையும் வழங்கும். விவசாயத்திற்கும் மற்றும் நீர் விநியோக சாதனங்கள் பிரிவுக்கும் நிலைத்தன்மையுள்ள, செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இணைய-இயற்பியல் தீர்வுகளை உருவாக்குவதில் மேம்பட்ட அறிவையும் மற்றும் நடைமுறை சார்ந்த அனுபவத்தையும் மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் வழங்குவதே இந்த ஆய்வக திட்டத்தின் நோக்கமாகும்.
இப்பல்கலைக் கழகம், HITS வளாகத்தில் TANCAM ஸ்போக் சென்டர் என்பதையும் திறந்து வைத்தது. இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த ஆய்வக வசதிகளுக்கு நேரடி அணுகலையும், மற்றும் டசால்ட் சிஸ்டம்ஸ்-ன் புகழ்பெற்ற 3Dஎக்ஸ்பிரீயன்ஸ் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நவீன உற்பத்தி செயல்பாடுகளில் நேரடி பயிற்சியையும் மாணவர்கள் பெறுவார்கள். இந்த ஒத்துழைப்பு திட்டத்தின் வழியாக பணி வாழ்க்கைக்கு தங்களை தயாராக்கி கொள்ளவும் மற்றும் உலகளவில் போட்டித்திறன் கொண்டவர்களாகவும் ஆக்குவதற்கு நவீன தொழில்நுட்பத்தின் மீது பரிச்சயம், தொழில்துறைக்கு அவசியமான திறன்கள் மற்றும் நடைமுறை அனுபவத்தை மாணவர்கள் பெறுவார்கள்.
இந்த பட்டமளிப்பு விழா நிகழ்வின்போது ஆராய்ச்சி, முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்கான சிறப்பானபங்களிப்புக்காக நிறுவனர் டாக்டர் கே.சி.ஜி. வர்கீஸ் விருது, ஆராய்ச்சித் துறையில் இசிஇ (ECE) துறை முனைவர் பட்டஆய்வாளர் செல்வி சுவாதி N-க்கு வழங்கப்பட்டது. சிறந்தகல்வித் திறனுக்கான நிறுவனர்-வேந்தர் டாக்டர் (திருமதி) எலிசபெத் வர்கீஸ் விருது, பி.டெக் ஐ.டி (CS) மாணவர் திரு. விஷ்ணு பிரியன் J-க்கு வழங்கப்பட்டது. சிறந்த இறுதி ஆண்டுமாணவிக்கான வேந்தர் டாக்டர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ்விருது, கல்வி மற்றும் இதர இணைச் செயல்பாடுகளில் சிறந்துவிளங்கியதற்கான அங்கீகாரமாக பி.டெக் (ஏரோ) மாணவிசெல்வி சிவரஞ்சனிக்கு வழங்கப்பட்டது.
ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ், மாணவர்களை ஊக்கப்படுத்திப் பேசினார்.இன்றைய நிகழ்வில் பட்டம் பெற்ற பட்டதாரிகளைப் பாராட்டிய அவர், எதிர்காலத்திலும் தங்கள் அறிவுத் தேடலைத் தொடருமாறு அவர்களை கேட்டுக்கொண்டார். மேலும், “வாழ்க்கையில் சவால்கள் வந்தாலும் வாய்ப்புகள் கிடைத்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து ஆர்வத்துடன், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஈடுபடுவதன் அவசியத்தை”அவர் வலியுறுத்தினார்.
தலைமை விருந்தினர் மேதகு ஆலம் தசாயி வோல்டெமரியம், தனது உரையில், தன் கல்வி மற்றும் பணிக்கான பயணத்தில் வாழ்க்கையை மாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.அப்போது அவருக்கு கிடைத்த வாய்ப்புகளையும் மற்றும் எதிர்கொண்ட சவால்களையும் குறித்து எடுத்துக்காட்டுகளுடன் விவரித்தார். “உங்கள் லட்சியங்களை உறுதியுடன் பின்பற்றுங்கள். அதற்காக ஆர்வம், கற்றல், கருணை போன்ற குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிட்டு பட்டதாரிகளை அவர் ஊக்கப்படுத்தினார்.
பல்கலையின் துணைவேந்தர் (I/C) டாக்டர். S. கணேசன், 2024-2025 கல்வியாண்டின் போது எட்டிய மைல்கல்கள் மற்றும் சாதனைகள், உருவாக்கப்பட்ட பரவலான வாய்ப்புகள், நிறுவப்பட்ட தரஅளவுகோல்கள், உலகளாவிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், சிறப்பான உட்கட்டமைப்பு வசதி ஆகியவற்றை குறிப்பிட்ட ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். ஹிந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க ஆண்டாக இது அமைந்ததற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வாகம் உட்பட ஒவ்வொரு நபரின் கடும் உழைப்பையும் மற்றும் அர்ப்பணிப்பையும் சுட்டிக்காட்டி அவர் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்தார்.
அடுத்த தலைமுறைக்கான தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் சந்தையின் புதிய போக்கை நிறுவுபவர்களாக மாணவர்களை உருவாக்குகின்றன HITS-ன் தளராத உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் இந்நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.
