சென்னை, 9 அக்டோபர் 2025: காவேரி மருத்துவமனை குழுமம், தனது ஆழ்வார்பேட்டை மருத்துவமனையானது கௌரவமிக்க ஜாயிண்ட் கமிஷன் இன்டர்நேஷனல் (JCI) 8-வது பதிப்பு அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதை பெருமிதம் கலந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இதற்கு முன்னதாக 2025 ஜனவரி மாதத்தில் இக்குழுமத்தின் வடபழனி மருத்துவமனை இதே அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரட்டை அங்கீகாரத்தின் மூலம், இந்தியாவில் JCI-ன் பல அங்கீகாரத்தைப் பெற்ற பல மையங்களைக் கொண்ட வெகு சில பிரத்யேக மருத்துவமனைகளின் பட்டியலில் காவேரி இணைந்திருக்கிறது. இதன்வழியாக, உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைக்கான ஒரு நம்பகமான மையம் என்ற தனது வலுவான அந்தஸ்தை காவேரி மருத்துவமனை குழுமம் மீண்டும் உறுதி செய்துள்ளது.
JCI 8-வது பதிப்பின் தரநிலைகள், உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பில் மிகவும் கடுமையான மற்றும் மேம்படுத்தப்பட்ட அளவுகோல்களைக் குறிக்கின்றன. அளவிடக்கூடிய 1,094 கூறுகளை உள்ளடக்கிய இந்தத் தரநிலைகள் பின்வருவனவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன:
பசுமை மருத்துவமனை: காவேரி மருத்துவமனையைப் பொறுத்தவரை, நோய்களுக்கு சிகிச்சையளிப்பதுடன் அதன் கடமை முடிந்துவிடுவதில்லை என்று உறுதியாக நம்புகிறது. நோயாளிகள் வாழும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதும், எதிர்காலத் தலைமுறையினருக்குப் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நீடித்த சுகாதார சேவையை உறுதி செய்வதும் தனது கடமை பொறுப்பில் உள்ளடங்கியது என்ற கண்ணோட்டத்துடன் இம்மருத்துவமனை செயல்படுகிறது. உலகளாவிய தரங்களுக்கு நிகரான சிகிச்சை மற்றும் செயல்பாட்டின் வழியாக, காவேரி மருத்துவமனை இன்றைய நோயாளிகளுக்கு மட்டுமல்லாமல், நாளைய சமூகத்தின் ஆரோக்கியத்திற்கும் பொறுப்பேற்கிறது. ‘
