சென்னை, அக்டோபர் 28, 2025: இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்டறியும் சேவை (Integrated Diagnostics Provider) நிறுவனமான ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் [Aarthi Scans and Labs], நமது உடல் செயல்பாடுகள் மற்றும் நீடித்த ஆரோக்கியம் தொடர்பான முக்கிய தகவல்களைக் [performance &wellness vertical, Vital Insights] கண்டறியும் பரிசோதனை மையத்தை சென்னை அண்ணா நகரில் தொடங்கியுள்ளது. இந்த புதிய பரிசோதனை மையத்தை, உடல்நலத்தை வலுப்படுத்தும் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் பிரிவில் புகழ்பெற்ற நிபுணர் திரு. ஏ.டி. இராஜாமணி (A.T. Rajamani, Strength and Conditioning Coach) அவர்களால் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், ஆர்த்தி ஸ்கேன்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. வி. கோவிந்தராஜன் (V Govindarajan, Founder and CEO, Aarthi Scans) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மையம், தனிநபர்கள் மேற்கொண்டு வரும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளைத் தாண்டி, அவர்களின் உடலமைப்பு (Structural), உடலில் உள்ள இரசாயனங்கள் (Chemical), மற்றும் உடல் செயல்பட்டு வரும் முறை (Functional) ஆகியவற்றின் மூலம் மூன்று முக்கியமான பரிமாணங்களில் தங்கள் உடலைப் புரிந்து கொள்ள உதவுகிறது. டெக்ஸா ஸ்கேன்கள் (DEXA scans), வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்தம் தொடர்பான அளவீடுகளுக்கான பரிசோதனை (metabolic & blood profiling), உடல் வலிமை மற்றும் உடலின் சமநிலை குறித்த மதிப்பீடுகள் (strength & balance assessments), உடல் முழுவதற்குமான எம்.ஆர்.ஐ. இமேஜிங் (CT & MRI imaging) போன்ற மிகவும் மேம்பட்ட நோயறியும் சோதனைகள் மூலம், ஒருவரின் உடல் எவ்வாறு செயல்படுகிறது என்றும் உடல்நிலையில் உண்டாகும் மாற்றங்களுக்கு ஏற்ப எப்படி தன்னை தகவமைத்து கொள்கிறது என்பது பற்றியும் முழுமையான கண்ணோட்டம் உள்ளிட்டவைகளை ஒரே தளத்தில் எளிதில் மேற்கொள்ளும் வகையில் இந்த ஆய்வகம் வழங்குகிறது.
