டாக்டர் K. விஜயகார்த்திகேயன் ஐஏஎஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சென்னை, அக்டோபர் 2025 :பல குடும்பங்களுக்கு பக்கவாதம் / ஸ்ட்ரோக், எவ்வித முன்னெச்சரிக்கை இல்லாமல் நடத்தப்படும் தாக்குதலாகவே இருக்கிறது; சில நிமிடங்களில் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடுகிறது. ஆனால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நபர்களுக்கு சென்னை, காவேரி மருத்துவமனையில் உரிய நேரத்தில் வழங்கப்பட்ட சிகிச்சையானது அவர்களின் வாழ்க்கைக் கதையை மாற்றி மேம்படுத்தி புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது.
உலக பக்கவாத தினம் 2025 ஐயொட்டி நடத்தப்பட்ட வெற்றி பெருமித நிகழ்வின்போது தனது 4 ½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் வழங்கியிருக்கும் நம்பிக்கை தரும் விளைவுகளை இம்மருத்துவமனை பகிர்ந்து கொண்டது; பக்கவாத அறிகுறிகள் தோன்றிய பிறகு மிக முக்கியமான ஆரம்ப மணி நேரங்களுக்குள் அந்நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது மீது சிறப்பு கவனம் செலுத்தும் ஒரு தனிச்சிறப்பான முன்னெடுப்பு திட்டமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
பக்கவாத சிகிச்சைக்கு அவசரநிலை உதவி எண்: 📞 044 4000 6000
