சி எஸ் ஆர் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, ஈஎக்ஸ் எல் சர்வீஸ் நிறுவனம் கொச்சி வாஸ்கோடகாமா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை 22 நவம்பர் 2025 அன்று மேற்கொண்டது. சேவாலயாதொண்டு நிறுவனம் இம்முயற்சியின்ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டது. நிகழ்வில் 110ஈ எக்ஸ் எல் சர்வீஸ் நிறுவன பணியாளர்கள், செயின்ட் பால்ஸ் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டதான்னார்வல மாணவர்கள் 20 பேர் மற்றும் பல்வேறுஉள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் சேவாலயாபணியாளர்கள் இணைந்து ஆர்வத்துடன் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
ஈ எக்ஸ் எல் நிறுவன வைஸ் ப்ரெசிடெண்ட் சூசன்பால், டி டி பி சி கொச்சி (சுற்றுலாத் துறை) செயலாளர் லிஜோ ஜோசப் , ஈ எக்ஸ் எல் நிறுவன ஏவி பி மிருதுளா முரளிதரன் மற்றும் சுதிர் மேத்தியூஸ், எர்ணாகுளம் மாவட்ட டி டி ஓ (சுற்றுலாத் துறை) ரவிக்குமார் மற்றும் ரஞ்சித் (ராஜகிரி கல்லூரி சி டி ஓ) ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
இம்முயற்சியில் மூலம் 500 கிலோ பிளாஸ்டிக் மற்றும்மக்கா குப்பைகள் மற்றும் 5,000 கிலோ மக்கும்குப்பைகள் சேகரிக்கப்பட்டன. கடலோரங்களில்சுகாதாரம் காத்தல், கடற்கரையின் இயற்கை அழகைக்கூட்டுதல், கடல்வாழ் உயிரினங்களைக் காத்தல் ஆகியபயன்களோடு கடலோர பகுதிகளில் மாசைக்குறைப்பதன் மூலம் நீண்டகால சுற்றுபுறச்சூழல்பாதுகாப்பையும் இம்முயற்சிகள் உறுதி செய்கின்றன.
