
செங்கல்பட்டு மாவட்டம் – லத்தூர் மற்றும் திருக்கழுக்குன்றம்
செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் மற்றும் திருக்கழுக்குன்றம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளாப்பாக்கம், வடக்குவாயலூர், கல்குளம் மற்றும் தொண்டமானல்லூர் ஆகிய அரசு பள்ளிகளில் 2026ஆம் ஆண்டிற்கான குழந்தைகள் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.பிரயாஸ் அறக்கட்டளை (Prayas Trust) ஆதரவுடன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா (Hand in Hand India) அமைப்பின் மூலம் இவ்விழா பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா பணியாளர்கள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.மாணவர்களின் வயது மற்றும் வகுப்புகளுக்கு ஏற்ப பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஒவ்வொரு வகுப்பின் அடிப்படையில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சி மாணவர்களிடையே விளையாட்டுத் திறன், குழு உணர்வு, தன்னம்பிக்கை மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் வகையில் அமைந்தது. மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் குழந்தைகள் தின விழாவைக் கொண்டாடினர்.குழந்தைகளின் மகிழ்ச்சியும், திறமைகளும் மலரட்டும் என்ற நோக்கத்துடன் இவ்விழா சிறப்பாக நிறைவடைந்தது.
