சென்னை, பிப்ரவரி 2026
இந்தியாவின் சமூக மற்றும் சட்ட அமைப்புகளுக்குள் எளிதில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய குழந்தைகளும், சிறார்களும்எதிர்கொள்ளும் கசப்பான உண்மைகளையும், எதார்த்த நிலைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் புதிய நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது.
‘Help! Can You Hear Us? – Navigating Societal Fault Lines with Children’ என்ற தலைப்பிலான இந்த நூலை, குழந்தைகள் நல ஆர்வலரும், ‘ரிலீஃப் ஃபவுண்டேஷன்’ நிறுவனருமான வித்யா சங்கர் சக்ரவர்த்தி எழுதியுள்ளார்.
நூல் வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து, நூலாசிரியர், சிறப்பு விருந்தினரான ஒடிசா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், மூத்த வழக்கறிஞருமான டாக்டர் எஸ். முரளிதர்மற்றும் வாழ்க்கை வரலாற்று நூலாசிரியர் திருமதி. வசந்தி சுந்தரம் ஆகியோர் பங்கேற்ற ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பார்வையாளர்கள் கேள்விகளுக்கு பதில்களும், தெளிவான விளக்கமும் வழங்கப்பட்டன.
சட்டத்துடன் முரண்பட்டு மோதல் போக்கை கடைபிடிக்கும்சிறார்கள் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுடன் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவங்களின் அடிப்படையில் இந்த நூலை இதன் ஆசிரியர் வித்யா சங்கர் சக்ரவர்த்தி எழுதியிருக்கிறார். சமூக கட்டமைப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் காணப்படும் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டு தவறான பாதையில் சென்றிருக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உண்மைச் சம்பவங்களை ஆசிரியர் இதில் பதிவு செய்துள்ளார். வாழ்க்கை வரலாற்று நூலாசிரியர் திருமதி வசந்தி சுந்தரத்தால் நேர்த்தியாகதொகுக்கப்பட்டுள்ள இந்த நூல், வெறும் புள்ளிவிவரங்களைத் தாண்டி, சமூக அமைப்புகளின் தோல்வியால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய சிறார்களுக்கு மனித நேயத்தோடும், புரிந்துணர்வோடும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதன் வேண்டியதன் அவசியத்தையும் இந்த நூல் வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் இயங்கும் சிறார் சீர்திருத்த இல்லங்கள், நீதிமன்றங்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகளுடன் நூலாசிரியர் பணியாற்றிய நேரடி அனுபவங்களின் அடிப்படையில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது எதார்த்த நிலையை மிகச் சரியாக வெளிப்படுத்துகிறது. துன்புறுத்தல், துஷ்பிரயோகம், அலட்சியம் மற்றும் சுரண்டல் பற்றிய நிஜ வாழ்க்கை நிகழ்வுகள் வழியாக, குழந்தைப் பருவம், நீதி மற்றும் சமூகப் பொறுப்பை நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய இந்தப் புத்தகம் வாசகர்களை தூண்டுகிறது.
இந்நிகழ்ச்சியில் இதன் நூலாசிரியர் வித்யா சங்கர் சக்ரவர்த்தி பேசியதாவது:
“இந்தப் புத்தகம், தனிநபர்கள் மீதான குற்றச்சாட்டு பதிவேடு அல்ல; மாறாக இந்நாட்டின் குடிமக்களாகவும், நிபுணர்களாகவும், சக மனிதர்களாகவும் இருக்கும் நம் அனைவரிடமும் ஒரு கேள்வியை எழுப்புகிறது. நான் எழுதியுள்ள இந்நூலில் இடம் பெற்றுள்ள குழந்தைகள் யாரிடம் இருந்தும்இரக்கத்தையோ, அனுதாபத்தையோ எதிர்பார்க்கவில்லை; தாங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும், தங்கள் குரல் கேட்கப்பட வேண்டும் மற்றும் தங்களுக்குப் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள். உதவி! எங்கள் குரல் உங்களுக்கு கேட்கிறதா? (Help! Can You Hear Us?) என்ற இந்த நூல் அவர்களின் வலுவான குரலாகவே வெளிவந்துள்ளது.”
இன்றைய சூழலில் இந்த நூலின் அவசியத்தை சுட்டிக் காட்டிய சிறப்பு விருந்தினர் டாக்டர் எஸ். முரளிதர் கூறியதாவது:
“சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. துயரத்தில் இருக்கும் குழந்தைகளின் குரல்களைகவனமுடனும், புரிந்துணர்வுடனும் கவனிப்பதன் முக்கியத்துவத்தை வித்யாவின் இந்தப் புத்தகம் உணர்த்துகிறது. கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, இன்றைய குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்த நாம் செயல்பட்டால், நாளைய குழந்தைகளுக்கு நிச்சயம் நம்பிக்கை வெளிச்சம் கிடைக்கும்; அவர்களின் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும் என்பதை இது நமக்கெல்லாம் நினைவூட்டுகிறது.”
இந்த மாலை நேர நிகழ்வு, சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூகப் பணியாளர்கள் மற்றும் கொள்கை முடிவெடுப்பவர்கள் எனப் பங்கேற்ற அனைவர் மத்தியிலும் கலந்துரையாடலையும், விவாதத்தையும் தூண்டியது.
குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நீதி குறித்த விவாதங்கள் வெறும் அறிக்கைகளுடன் நின்றுவிடாமல், குழந்தைகளின் குரல்களை கவனமுடன் கேட்டுச் செயல்பட வேண்டிய நேரமிது என்பதை இந்தப் புத்தகம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
ஊடக விசாரணைகளுக்கு, நேர்காணல்களுக்கு அல்லது விமர்சன ஆய்வுக்கான பிரதிகளை பெறுவதற்கு தயவுசெய்து தொடர்பு கொள்க:
வித்யா சங்கர் சக்ரவர்த்தி vidya@awakentolife.org +91 94446 06456
