
சென்னை போரூர் மாங்காடு அருகே காஞ்சிபுரம் மாவட்டம் சிலம்பாட்டம் கழகம் நடத்திய பள்ளி மாணவ, மாணவர்களுக்கான 7ஆம் ஆண்டு சிறப்பு சிலம்பாட்டம் போட்டி நடைபெற்றது.
கடந்த ஏழு வருடங்களாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தும் சிறப்பு சிலம்பம் போட்டியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி பரிசுகளை வென்றனர். இப்போட்டியில் ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, தொடுதல், வால் வீச்சு, மற்றும் மான் கொம்பு, போன்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, T 4 மாங்காடு காவல் நிலையம் ஆய்வாளர் ஜெய்சங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியினை இந்திய சிலம்பம் சமமேலான் தலைவர் முத்துராமன் போட்டியை தொடக்கி வைத்தார்.
மாநில பொதுச் செயலாளர் ரத்தினகுமார் வரவேற்புரை ஆற்றினார்.
காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் லட்சுமணன் வாழ்த்துரை வழங்கினார்.
