
சேலம் ரோட்டரி கிளப் ஆஃப் சேலம் ஜிம்கானா சங்கத்தின் புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி ஜூலை 5ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக ஆர்ஐடி 2982 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் செந்தில்குமார் கௌரவ விருந்தினராக ஆர்ஐடி3000 2025-26 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் கார்த்திக் மற்றும் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் உதவியாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். 2026-27 ஆண்டிற்கான சங்கத் தலைவராக ரோட்டேரியன் தினேஷ்குமார் செயலாளராக ரோட்டேரியன் மகாராஜா பொருளாளராக ரோட்டேரியன் பாலமுருகன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டார்கள்.
