
பொரங்கால் கிராமத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இரவு பாடசாலையின் முதலாம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது
செங்கல்பட்டு மாவட்டம், பொரங்கால் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இரவு பாடசாலையின் முதலாம் ஆண்டு விழா நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி சமூக ஆர்வலர் டாக்டர் மு. கோபன்ராஜ் தலைமையிலும், இரவு பாடசாலை ஆசிரியர் சே. அபிநயா முன்னிலையிலும் நடைபெற்றது. மாணவ, மாணவியர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
சிறப்பு விருந்தினர்களாக பூங்குணம் காவல் கார்த்திக், “உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்” அறக்கட்டளையின் நிறுவனர் சகோதரி மேரி பத்மா, சந்திரன் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ஏ. மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம், சமூகப் பொறுப்பு மற்றும் மனிதநேய விழுமியங்கள் குறித்து சிறப்புரையாற்றினர். மேலும், கிராமத்தின் பெரியோர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி ஊக்குவித்தனர்.
விழாவின் ஒரு பகுதியாக, இரவு பாடசாலையில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிப் பைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும், பொரங்கால் கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத்தொகைகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
விழாவின் சிறப்பு அம்சமாக, சந்திரன் அறக்கட்டளையின் சார்பில் “அகவை 25 – பொரங்கால் கிராமத்தின் தலைமகன் டாக்டர் மு. கோபன்ராஜ்” என்ற நூல் வெளியிடப்பட்டது.
கல்வி, சமூக முன்னேற்றம் மற்றும் மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்கில் நடைபெற்ற இவ்விழா பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழா ஏற்பாட்டாளர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
