
தென்காசி செப் ; 02 –
தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா, பெரியபிள்ளைவலசை ஊராட்சிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் எம்.எம். நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் கவின் ஹரிஷ் குமார், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தொடர் சாதனைகளைப் படைத்து பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற 13 வயதிற்கு உட்பட்டோருக்கான மாவட்ட அளவிலான டேக்வாண்டோ (Taekwondo) போட்டியில், 38 முதல் 40 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற இம்மாணவர் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
மேலும், தடகளப் போட்டிகளிலும் சிறந்து விளங்கும் கவின் ஹரிஷ் குமார், மாவட்ட அளவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய இரு போட்டிகளிலும் 3-ஆம் இடத்தைப் பிடித்தார். இதன் தொடர்ச்சியாக, மாநில அளவில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான தடகளப் போட்டியிலும் பங்கேற்று மாநில அளவில் 3-ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக உருவெடுத்து வரும் மாணவர் கவின் ஹரிஷ் குமாரைப் பள்ளி நிர்வாகி முகம்மது, தலைமையாசிரியர் சா.முகமது யூசுப், உடற்கல்வி ஆசிரியர் சாகுல் ஹமீது மற்றும் பயிற்சியாளர்கள் நாராயண சர்மா, ராணி சந்திரா ஆகியோர் நேரில் பாராட்டி வாழ்த்தினர்.
சாதனை படைத்த மாணவரை அவரது பெற்றோர்களான M. மாரிமுத்து – மா. கருமாரி தம்பதியினரும், ஊர் பொதுமக்களும் பாராட்டி மகிழ்ந்தனர்.
