
தமிழ்நாட்டில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், அலன் கரியர் இன்ஸ்டிடியூட் தனது புதிய மையத்தை திருச்சியில் பிரம்மாண்டமாகத் திறந்துள்ளது. திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வி வழிகாட்டுதல், கட்டமைக்கப்பட்ட கற்றல் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பை மேலும் எளிதாகக் கொண்டு சேர்க்கும் அலனின் முயற்சியில், இந்தப் புதிய மையத்தின் தொடக்கம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த புதிய மையம் திருச்சி அண்ணாமலை நகரில் அமைந்துள்ளது.
திறப்பு விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அலன் முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்வித் துறையைச் சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு அலன் கரியர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சி.ஆர்.சௌத்ரி, அலன் கரியர் இன்ஸ்டிடியூட், தென் மண்டலத் தலைவர் மகேஷ் யாதவ், அலன் கரியர் இன்ஸ்டிடியூட், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கல்விப் பிரிவுத் தலைவர் சந்தோஷ் சிங் ஆகியோர் தலைமை வகித்தனர். திருச்சி சுங்கத்துறை இணை ஆணையர் ஜி.வி. பாண்டியராஜ், ஐ.ஆர்.எஸ்., இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, ‘டாப்பர்ஸ் டாக்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எய்ம்ஸ், ஜிப்மர், ஐஐடி என்ஐடி ஆகிய முன்னணி கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் அலன் முன்னாள் மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அலன் கரியர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சி.ஆர்.சௌத்ரி, “திருச்சி மையத்தின் தொடக்கம், தமிழ்நாடு முழுவதும் மேலும் அதிகமான மாணவர்களுக்கு தரமான கல்வி வழிகாட்டுதலை எளிதில் கிடைக்கச் செய்வதற்கான எங்களது முயற்சியில் ஒரு முக்கியமான படியாகும்,” என்றார்.
