
சேலம்
சேலம் அம்மாபேட்டை சிவாஜி நகரிலுள்ள ஸ்ரீ வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளியில் வித்யா பாரதி சார்பில் அகில் பாரதிய சிஷா சன்ஸ்தான் நமாமி பாரதம், வந்தே மாதரம் குழு பாடல் நிகழ்ச்சி எஸ் வி எம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் எஸ் வி எம் பள்ளி முதல்வர் ஸ்ரீ லட்சுமணன் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக சேஃப் லைன் இண்டஸ்ட்ரீஸ் ஸ்ரீ ஆர். கேசவராஜ் மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இந்திய விமானப்படை, ரிட்டேட் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை ஸ்ரீ என்.பி.சத்யநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் கேசவராஜ் விடுதலைப் போராட்டத்தின் தாரக மந்திரமான வந்தே மாதரம் பாடலின் தோற்றம் வரலாறு மற்றும் மகத்துவம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரிவான விளக்கம் கொடுத்து சிறப்புரையாற்றினார். மேலும் வந்தே மாதரம் முழக்கத்தை ரிட்டேட் இந்திய விமானப்படை சத்யநாத் , பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஒன்றிணைந்து ஒரே குரலில் பாடிய வந்தே மாதரம் பாடல் பள்ளி வளாகம் முழுவதும் எதிரொலித்த தேசபக்தி முழக்கங்கள் மிகுந்த பெருமிதத்துடனும், உற்சாகத்துடனும் மாணவ, மாணவிகள் பாடி கொண்டாடினார்கள்.
