
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா உதயேந்திரம் முதல்நிலை பேரூராட்சியில் மன்ற உறுப்பினர்கள் மாதாந்திர சாதாரண கூட்டம் 25/09/2026 அன்று பேரூராட்சி மன்றத் தலைவர் ஆ.பூசாராணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பொறுப்பு செயல் அலுவலர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார். பேரூராட்சி அலுவலக எழுத்தாளர். மீனாட்சி அனைவரையும் வரவேற்று தீர்மான அறிக்கையை வாசித்தார்.
கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக பதில் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேருந்து பயணியர் நிழற்கூடம், மழைநீர் வடிகால் கால்வாய், புதிய கல்வெட்டுகள், சமுதாயக்கூடம், உடற்பயிற்சி நிலையம், சிமெண்ட் சாலை, குடிநீர் உள்ளிட்ட 11 திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் துணைத் தலைவர் கோவிந்தராஜ் பேரூராட்சி மன்ற உறுப்பினர். முன்னாள் தலைவருமான
ஆ.செல்வராஜ், வக்கில்.மரியஜோசப். ரமேஷ், சரவணன், அம்பலவாணன், மகேஸ்வரி, ரஞ்சனி,
சந்தியாபழனி, கீதாஜெகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூராட்சி அலுவலக எழுத்தாளர் மீனாட்சி நன்றி கூறினார்.
