
திருப்பத்தூர் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மஹாலில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ.இரஞ்சித்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் தலைமையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.நா.திருப்பதி முன்னிலையில் இன்று (05.11.2026) 460 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு தொழில் முனைவோருக்கான ரூ.57.55 கோடி மதிப்பிலான வங்கி நிதி இணைப்பு மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில், 976 பயனாளிகளுக்கு ரூ.59.23 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் விஜயகுமாரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, வேளாண்மை இணை இயக்குநர் மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், திருப்பத்தூர் வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன், உதவி இயக்குநர்கள் ஊராட்சிகள் அருணாச்சலம், முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விஜயகுமார், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் இராமமூர்த்தி, தாட்கோ மாவட்ட மேலாளர் கூத்தன், ஆலங்காயம் பேரூராட்சி செயல் அலுவலர் இராஜலட்சுமி, மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
