
சேலம் இரண்டாவது அக்ரஹாரம் தேரடி வீதியில் குப்தா ஸ்வீட்ஸ் புதிய கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. தீபாவளியின் சிறப்பு விற்பனையாக உயர் தரத்திலும், சுகாதார முறையில்,குறைந்த விலையில் அனைத்து இனிப்பு, காரம் வாங்குவதற்கு சிறந்த கடையாக அமையப் பெற்றுள்ளது. இந்த திறப்பு விழாவில் கடையின் உரிமையாளர் பிரமோத் குடும்பத்தினர் குத்து விளக்கேற்றி கடையினை திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் கடை உரிமையாளர்கள் குடும்பத்தினர், உறவினர்கள் நண்பர்கள் மற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
