
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த அரியூரில் அமைந்துள்ள அருள் நிறை ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆலயத்தில்14 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா விழாவில் விசேஷ றபூஜைகள் ,நான்கு வேளை ஆரத்தி, சிறப்பு பஜனை, சாவடி ஊர்வலம், மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அன்னதான மண்டபத்தில் கோ பூஜையும் ,சத்திய நாராயணா விரத பூஜை , கணபதி ஹோமம் ,லட்சுமி ஹோமம் ,நவகிரக ஹோமம் ஆகிய நிகழ்ச்சிகளில் ஊர் பொதுமக்கள் ,விழா குழுவினர்கள் ,சீரடி சாய்பாபா பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.