
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி காவல் நிலைய சார்பு ஆய்வாளராக பட்டுராஜா கடந்த 4 மாதங்களுக்கு முன் பணி அமர்த்தப்பட்டார். பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் விசாரித்து துரித நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். மேலும் பள்ளி குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்துள்ளார். திருப்புல்லாணி வட்டாரத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுத்து வந்துள்ளார்.
நான்கு மாதத்தில் சிறப்பாக பணியாற்றியதை பொதுமக்கள் அவ்வப்போது பாராட்டி வந்துள்ளனர். இந்நிலையில், திருப்புல்லாணி சார்பு ஆய்வாளர் பட்டுராஜா திடீரென பணியிட மாற்றம் செய்யப்படுவதாக மக்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து ஜனநாயக முறைப்படி எதிர்ப்பை தெரிவித்து நகர் முழுவதும் வால்போஸ்ட்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த பணியிடமாற்றதை மறுபரிசீலனை செய்து திருப்புல்லாணி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் பட்டு ராஜாவின் பணி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்புல்லாணி சுற்று வட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.