
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர புறா வளர்ப்பு சங்கத்தின் சார்பாக 51-ஆம் ஆண்டு சாதா புறா – கர்ணப்புறா கூட்டுப் போட்டிகள் நிகழ்ச்சியில் கோபி நகர மன்ற தலைவரும் திமுக நகரச் செயலாளருமான என்.ஆர்.நாகராஜ் புறாக்களை பறக்கவிட்டு போட்டியை துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் ஜி.என்.முருகேசன், கரூர் வி.நெடுஞ்செழியன், மற்றும் பொருப்பாளர் என்.பி.ஆறுமுகம் உட்பட சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.