சென்னை, மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்னை மேடவாக்கம் சுப்ரீம் அரிமா சங்கம் சார்பில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களை பாராட்டி கேடயம் வழங்கி கௌரவித்தனர்.

சென்னை மேடவாக்கம் சுப்ரீம் லயன் சங்க தலைவர்  பாண்டியராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக அரிமா சங்க மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் மணிசேகர், மருத்துவர் தின மாவட்ட தலைவர் குணசேகர், மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்பாபு, மாவட்ட பொருளாளர் சரவணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சென்னை மேடவாக்கம் சுப்ரீம் அரிமா சங்க செயலாளர் இராமலிங்கம், பொருளாளர் சக்ரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவ தின மாவட்ட தலைவர் குணசேகர் வரவேற்புரையாற்றினர்.

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு சென்னை மேடவாக்கம் சுப்ரீம் அரிமா சங்கம் சார்பில் மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் பணியாற்றும் தலைமை மருத்துவர் செல்லையா பாபுகணேஷ் உட்பட 40  மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சேவையை பாராட்டி நினைவு பரிசு, கேடயம், பாராட்டு சான்றிதழ் ஆகியவை வழங்கி, பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

இதில் மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பல் மருத்துவ பிரிவு கட்டிடத்திற்கு குடிநீர்  தொட்டி வழங்கப்பட்டது.

இதில் அரிமா சங்க மாவட்ட துணை பொருளாளர் கல்யாணசுந்தரம், மண்டல தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர் ராஜாராம்கொல்லே, வட்டார தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், மாவட்ட தலைவர்களின் ஒருங்கிணைப்பாளர் பச்சையப்பன், மாவட்ட ஜி.எம்.டி.ஜெயக்கொடி, மண்டல தலைவர் குணா, மண்டல தூதுவர் மாசிலாமணி,  மாவட்ட தகவல் தொடர்பு பிரிவு வீராசாமி மற்றும் சென்னை மேடவாக்கம் சுப்ரீம் அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.