அரியலூர் மாவட்டம், செந்துறை முதல் நிலை ஊராட்சியில் 8 ஆவது வார்டில்  மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்திம்  இலங்கைச்சேரி  கிராமத்தில் பெரிய ஏரியில் வேலைப் பணி நடைபெற்று வருகிறது. இதில் வேலை செய்வோர் அங்கு கிடக்கும் கருவேலி முள்ளுகளை அகற்றி தீ இட்டு கொளுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது ஆடி காற்றின் வேகம் அதிகரித்ததால் எதிர்ப்பறாத விதமாக பக்கத்தில் இருந்த  பொன்பரப்பியார் என்று அழைக்கப்படும் ராமச்சந்திரன் மகன் முருகையன் அவர்களின் ஒன்றை ஏக்கர் பரப்பளவு கொண்ட கரும்புத் தோட்டத்தில தீ பரவி  முழுவதும் எரிந்து தீயில் கரும்புகள் அனைத்து கருகி விட்டது. எனவே கரும்பு தோட்டத்தின் உரிமையாளர் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சம்பவம் பற்றி ஊரில் இருந்து மக்கள் தகவல் கொடுத்ததன் பேரில்  விரைந்து வந்த செந்துறை தீயணைப்புத்துறை வீரர்கள் பணியாளர்கள் மற்றும் செந்துறை காவல்துறை தீ மல மல  வென்று பரவிக் கொண்டிருந்த நிலையில் மேலும் பரவாமல் இருக்க வாகனத்தில் கொண்டு வந்த தண்ணீரை பீச்சி அடித்தனர் மேலும் ஒரு சில இடங்களில் புகைந்து கொண்டு இருந்ததால் தீயணைப்பு பணியாளர்கள் ஏரியில் உள்ள தீயையும் கரும்பு தோட்டத்தில் உள்ள தீயையும் பரவலாக தண்ணீர் பீச் அடித்து அணைக்கும்  வேளையில் மும்மரமாக ஈடுபட்டனர். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் பதறிப் போய் அழுதவாறு கூக்குரல் இட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.