இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு சேலை வழங்கப்பட்டது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மணியக்காரன்பட்டியில் இரட்டைமலை சீனிவாசனாரின்  164வது பிறந்தநாள் விழா புரட்சி பாரதம் கட்சியின் நிறுவன தலைவர் ஜெகன் மூர்த்தியின் ஆணையின்படி சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.ருசேத்திரகுமார் அறிவுரையின்படி நடை பெற்ற இந்த பிறந்தநாள் விழாவில் மணியக்காரன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .மேலும்  அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மே லும் இந்த பிறந்த நாள் விழாவில்   ஒன்றிய செயலாளர் ஜான் செல்லத்துரை, ஆண்டிபட்டி சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்  தேனி மாவட்ட தலைவர் புரட்சிப்பாண்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு சேலை வழங்கி சிறப்பித்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் தேனி ஒன்றிய செயலாளர் சுரேஷ் ,தேனி நகர பொருளாளர் ஈஸ்வரன், SK. செல்வம் ஆண்டிபட்டி ஆசிர்வாதம் , அமிர்தம் போடி தாசன் பட்டி கண்ணதாசன் ஏத்தக்கோவில் ராஜா, சுதாகர் மற்றும் புரட்சி பாரதம் கட்சி  நிர்வாகிகள் ,கிராம பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்