சென்னை போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சென்னை அடையாறு அரிமா சங்கம் சார்பில் சுமார் 30 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி பணிகள் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.

சென்னை அடையாறு அரிமா சங்க தலைவர் வெங்கட்ராகவ தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடையாறு அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர்.நிசான், சங்க பொருளாளர் ஜெயராமன், சங்க சேவை இயக்குனர் கண்ணன், மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக ஐயப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஜமீலா பாண்டுரங்கன், முன்னாள் கவுன்சிலர் பாண்டுரங்கன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஏழுமலை, பள்ளி வளர்ச்சி மேலாண்மை குழு தலைவர் காஞ்சனா, நிர்வாககுழு உறுப்பினர் சமூக சேவகர்.மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளியில் பயிலும் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய கழிப்பிட கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. 

இதில் கழிப்பிடம் கட்டுவதற்கான அடி கல்லை அரிமா சங்க நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் எடுத்து தந்தனர்.

இது பற்றி சென்னை அடையாறு அரிமா சங்கத்தின் சேவை இயக்குனர் கண்ணன் கூறுகையில் எங்களது அடையாறு அரிமா சங்கம் மூலம் சுமார் 30 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் ஐயப்பன்தாங்கல் அரசு பள்ளிக்கு செய்ய இருக்கின்றோம். 

அதில் மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய கழிப்பிடம் அமைக்கப்படும்.

 மேலும் ஆய்வகம் புதுப்பிக்கும் பணி, இரண்டு பள்ளி கட்டிடங்கள் புதுப்பிக்கும் பணி, பள்ளியை சுற்றிலும் சுற்றுசுவர்அமைத்து இரண்டு நுழைவாயிலில் கேட் அமைக்கும் பணி, பள்ளி வளாகத்தில் மின்விளக்கு அமைக்கும் பணி போன்ற பல வளர்ச்சி பணிகளை செய்து தர உள்ளோம். தொடர்ந்து இன்னும் பல்வேறு வளர்ச்சி பணிகள் அரசு பள்ளிக்கு செய்யப்படும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மிளிர் கல்வி பயிற்சி மையத்தின் நிறுவனர் ராஜ்புத்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிராஜ், ஆசிரியர்கள் முருகன், மரகதம், பள்ளி வளர்ச்சி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.