ராமநாதபுரம் வக்ஃபு சரகம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் வீரசோழன் இஸ்லாமிய உறவின் முறை டிரஸ் போர்டு ஜமாத் நலனையும் கட்டுப்பாட்டையும் கண்ணியத்தையும் ஜமாத் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வண்ணம் தொடர்ந்து ஜமாத் விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறி சுமார் பத்து குடும்பங்களை ஊரை விட்டு ஜமாத் ஒதுக்கி வைப்பதாக ராமநாதபுரம் வக்ஃபு கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட குடும்பத்தினர் ராமநாதபுரம் வக்பு அலுவலகத்தில் கண்காணிப்பாளரிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கியுள்ளனர் மனுவில் குறிப்பிட்டு இருப்பது ஜமாத்தில் எலக்சன் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்த எங்களை சுமார் பத்து குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாகவும் இதுகுறித்து வீரசோழன் இஸ்லாமிய உறவின்முறை டிரெஸ் போர்டு ஜமாத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பத்து குடும்பங்களை சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் வக்பு அலுவலக கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு வைத்துள்ளனர்