சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவியருக்கான வரவேற்பு நிகழ்ச்சி கல்லுாரி தாளாளர் எஸ்.பாலாஜி தலைமையில் நடந்தது. முதல்வர் வேதநாயகி வரவேற்றார். துணை முதல்வர் பொற்செல்வி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக ஊக்குவிப்பாளர் சரவணன் பங்கேற்று பேசும் போது, மாணவர்களை விட மாணவிகள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். கல்லுாரி படிப்பு உங்களை உயர்த்துவதுடன், உயர்பதவிகளுக்கு செல்ல உறுதுணையாக இருக்கிறது. மாணவியர் விடா முயற்சியும்,தன்னம்பிக்கையுடன் படித்தால் நீங்கள் நிர்ணயித்த இலக்கை எளிதல் அடையலாம். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக முதலாம் ஆண்டு மாணவியர்களுக்கு, இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவியர், ரோஜா பூ கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.