அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கி ஐந்தாம் படை என போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணியசாமி ஆலயத்தில் தினந்தோறும் பல்லாயிரம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் கிருத்திகை ஆடிக்கிருத்திகை திருப்படி திருவிழா உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலத்தில் இருந்து வருகை தந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். இந்நிலையில் திருத்தணி முருகன் கோவில் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதால். பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும் கோவிலின் தரத்தை உயர்த்தி மேம்படுத்தவும இந்து அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன். மற்றும் செயலாளர் மணிவாசகம் ஆகியோர் கோயிலில் வருகை தந்து ஆய்வு செய்தனர். அப்போது. ராஜ்கோபுரம் வெள்ளி தேர் மற்றும் ராஜகோபுரத்தில் இருந்து தேர் வீதிக்கு இணைக்கும் படிக்கட்டுகள் பணிகளை தொடர்ந்து விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் அடிப்படை தேவைகளை பக்தர்கள் செய்யவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தற்போது இந்து அறநிலையத்துறை சார்பாக. பெருந்திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக செயலாளர் மணிவாசகம் தெரிவித்தார். அப்போது திருத்தணி முருகன் கோவில் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் குப்பன் மற்றும். சங்க நிர்வாகிகள் ஆணியரிடம் கோரிக்கை மனு ஒன்று வழங்கினர்.
. அதில் கடந்த 2017 ஆம் ஆண்டு அரசு கொண்டு வந்த ஏழாவது ஊதிய உயர்வு திட்டத்தை திருத்தணி முருகன் கோயில் பணியாளர்களுக்கு மட்டும் இதுவரை அமல்படுத்தவில்லை. ஆகவே இதை முழுமையாக அமல்படுத்தி உத்திரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.