அமெரிக்காவில் முதல் முறையாக மேஜர் லீக் டி20 என்ற புதிய கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 7-வது லீக் போட்டியில் ஐபிஎல் தொடரில் சென்னை நிர்வகிக்கும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை நிர்வகிக்கும் எம்ஐ நியூயார்க் ஆகிய அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற டெக்ஸாஸ் கேப்டன் டு பிளிசிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவோன் கான்வே 74 ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 155 என்ற சுலபமான இலக்கை துரத்திய எம்ஐ அணிக்கு ஆரம்பத்திலேயே மோனக் படேல் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க அடுத்து வந்த ஸ்டீவன் டெய்லர் 15 (21) ரன்களில் ஆட்டமிழந்து பின்னடைவை ஏற்படுத்தினார். அதைவிட அடுத்து வந்த அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரானும் தடுமாற்றமாகவே செயல்பட்டு 19 (15) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார்.