மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான XUV 700 மாடல் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்வதற்கு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய காரின் டிசைன் காப்புரிமை சார்ந்த விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் மஹிந்திரா XUV e8 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரியவந்துள்ளது.
தோற்றத்தில் இந்த கார் அதன் ஐசி இன்ஜின் கொண்ட மாடலைப் போன்று காட்சியளிக்கிறது. டிசைனிங்கும் மஹிந்திரா XUV e8 மாடல், XUV700-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த எலக்ட்ரிக் மாடலை கான்செப்ட் வெர்ஷன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் காட்சிக்கு வைக்கப்பட்டது. காரின் முகப்பு பகுதியில் எல்இடி லைட் பார், செங்குத்தாக பொருத்தப்பட்ட ஹெட்லேம்ப் கள் உள்ளன.
அத்துடன் பக்கவாட்டு பகுதியில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்படவில்லை. இந்த காரில் ஏரோடைனமிக் டிசைன் செய்யப்பட்ட வீல் கவர்கள், பிளாஸ் டோர் ஹேன்டில்கள் வழங்கப்படுகின்றன. இவை இந்த காரின் ரேன்ஜ்-ஐ சற்று அதிகப்படுத்தும் என்று தெரிகிறது. இந்த காரில் 80 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேட்டரியுடன் வழங்கப்படும் எலக்ட்ரிக் மோட்டார்கள் 230 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் எவ்வளவு கிலோமீட்டர்கள் செல்லும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.