திருத்தணியில் அண்மைக்காலமாக சரிவர உரிய நேரத்தில் பேருந்துகள் செல்வதில்லை. மேலும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் உரிய நேரத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக வெளியில் செல்லும் பொதுமக்கள் சரியான நேரத்தில் பேருந்துகளை இயக்காததால் அன்றாட இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்படுகறது. இந்நிலையில் திருத்தணி நகராட்சி முருகூர் பகுதியில் காலையில் இருந்து நீண்ட நேரம் எந்த பேருந்துகளும் வராமல் கல்லூரிக்கு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காத்திருந்து ஆத்திரமடைந்ததால் காலையில் 3 அரசு பேருந்துகளை பொதுமக்கள் சிறை பிடித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். தகவல் அறிந்த போக்குவரத்து பணிமனை மேலாளர் ஹரிபாபு விரைந்து வந்து இனிவரும் காலங்களில் குறிப்பிட்ட நேரத்தில்  பேருந்துகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தொடர்ந்து ஏற்பட்ட இந்த சிறை பிடிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் மறியலால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தி கூடியிருந்த பொது மக்களை சமரசம் செய்த பின் அரசு பேருந்துகள் விடுவிக்கப்பட்டன.