செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஜி. எஸ்.டி. சாலையில் உள்ள டார்லிங் எலக்ட்ரானிக்ஸ் ஷாப்பில் நள்ளிரவு சுமார் 01.00 மணி முதல் 03.00 மணி அளவில் கடை இரும்பு சட்டரின் பூட்டை உடைக்கப்பட்டு சுமார் 13 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டது இது சம்பந்தமாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி வி சாய் பிரனீத் உத்தரவுப்படி மதுராந்தகம் துணை காவல் கண்காணிப்பாளர் சிவசக்தி அவர்கள் மேற்பார்வையில் மதுராந்தகம் காவல் நிலைய ஆய்வாளர் தர்மலிங்கம் தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட சைபர் செல் பிரிவு உதவி ஆய்வாளர் தனசேகரன்,தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன்ராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் குப்புசாமி மற்றும் இளங்கோவன் தலைமை காவலர்கள் கர்ணன் முத்துக்குமார் மற்றும் உமா பிரபு தனிப்பிரிவு காவலர் கவியரசன் காவலர்கள் மணிகண்டன் கார்த்திகேயன் பெண் காவலர் ஐஸ்வர்யா சைபர் செல் பிரிவு காவலர்கள் முரளி,கலைவாணன் அவர்கள் உதவியுடன் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் சென்னை கொடுங்கையூரில் மொபைல் கடை வைத்திருந்த வெற்றிவேல் என்பவரை பிடித்து விசாரித்ததை அடுத்து அவர் தந்த தகவலை வைத்து கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த மோகன்ராஜ் சென்னை கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் சேர்ந்த வினோத் கொடுங்கூரைச் சேர்ந்த கணேசன் என்றவர்களிடம் இருந்து 43 விலை உயர்ந்த உயர்ரக செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் கைப்பற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ் வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி சாய் பிரினீத் திருடு நடைபெற்ற 72 மணி நேரத்தில் விரைந்து குற்றவாளி கைது செய்து பொருட்களை கைப்பற்றிய காவல் ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் அவரது குழுவினரை வெகுவாக பாராட்டினார்.
