கீரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஏசிடிஎஸ் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 380க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், தனியார் நிறுவனத்தின் நிதியுதவியில் ஏசிடிஎஸ் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வசுந்தரிராஜேந்திரன் தலைமை தாங்கினார். வார்டு உறுப்பினர்கள் எத்திராஜ், சசிகலா, லலிதா, வனிதா, உமா, ஊராட்சி செயலர் வரதராஜன் ஆகியோர் முன்னில வகித்தனர். ஏசிடிஎஸ் சமூக சேவை நிறுவனர் தேவன்பு விளக்க உரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகள் சுப்புராமன், கவிதா, பூங்கொடி ஆகியோர் கலந்துகொண்டு ₹.2 லட்சத்து 50ஆயிரம் மதிப்பிலான 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்தனர். முடிவில் சமூக சேவை நிறுவனத்தின் திட்ட அலுவலர் பிரின்ஸ் நன்றி கூறினார்.