.

 ஆரணி கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோவில் 50வது ஆண்டு ஆடித் திருவிழா நடைபெற்றது. ஆடித்திருவிழா முன்னிட்டு காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் ஆரணி கமண்டல நாக நதியில் இருந்து பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு ஆரணி பழைய பஸ் நிலையம், மார்க்கெட் ரோடு, கோட்டை மைதானம், காவலர் குடியிருப்பு பகுதி வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் பகல் 12 மணியளவில் கூழ்வார்த்தல் நடைபெற்றது பக்தர்கள் பொங்கல் வைத்து படையல் வைத்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 8.30 மணியளவில் நூதன புஷ்ப பல்லக்கினை விழா குழு தலைவர் ஜி.வி.கஜேந்திரன் தலைமையில் இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் துவக்கி வைத்தார்.

  புஷ்பபல்லக்கு கோட்டை மைதானம் வழியாக, பழைய பஸ் நிலையம், வடக்கு மாட வீதி, ஷராப் பஜார், எஸ்.எம்.ரோடு, அருணகிரி சத்திரம், கொசப்பாளையம் தர்மராஜா கோயில் தெரு, தச்சூர் ரோடு, சூரிய குளம், நகராட்சி அலுவலகம் வழியாகவும், பின்னர் காவலர் குடியிருப்பு வழியாக கோவிலை வந்தடைந்தது. சென்றது பல்லக்கில் வேம்புலியம்மன், அன்னபூரணி, திருக்கடையூர் அபிராமி,மகிஷா சூரவர்த்தினி, உள்ளிட்ட சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தது.  

   புஷ்ப பல்லக்கு முன்பு காஞ்சி காமகோடி நாதஸ்வரம், திருமலை தேவஸ்தானம் தவில் இசை கச்சேரி, திண்டுக்கல் தாரை தப்பட்டை, ஒயிலாட்டம், கனி கரகாட்ட குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சி, வடமருதூர் கரகாட்டம், கேரளம் காந்தாரா ஆட்டம், கேரளா வண்ணத்துப்பூச்சி நடனம், திண்டுக்கல் ராக்போர்ட் குழுவினரின் நாசிக் டோல், திருப்பத்தூர் பம்பை சிலம்பாட்டக் காரர்கள் நடனம், வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில்; விழா குழுவினர் பி.நடராஜன், ஜோதிடர் குமரேசன்.  கொங்கராம்பட்டு ஆறுமுகம், சுப்பிரமணி, நேமி ராஜ், குணா, ஜி.சங்கர், செல்வராஜ், இளையராஜா, சக்கரவர்த்தி, பேராசிரியர் கு.சிவா, சக்தி, டீக்கடை ராஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.