தென்காசியில்  கூலக்கடை பஜார் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் தென்காசி காவல் ஆய்வாளர் கே.எஸ். பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் வெள்ளபாண்டி, காவலர்கள் சரவணகுமார்  அன்பரசன் சிவப்பிரகாஷ் ஆகியோர் செய்த சோதனையில் தென்காசி தைக்கா தெருவை சேர்ந்த சலீம் த/பெ சாகுல் ஹமீது என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 50 கிலோ எடையுள்ள சுமார் 41,000 மதிப்பிலான குட்கா பொருட்களை கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணையில் அவர் அதிக லாபத்திற்கு இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் மற்றும் குற்றாலம் வரும் சுற்றுலா நபர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தார் என்பது தெரிய வந்தது