கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், காளசமுத்திரம் கிராமத்தில் இந்து அறநிலை ஆட்சித் துறைக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் புன்செய் நிலம் இந்து அறநிலைத்துறை ஆய்வாளர் திருமூர்த்தி தலைமையில், கிராம ஊராட்சி அலுவலர் நாகராஜ் முன்னிலையில் ஏலத்தின் அடிப்படையில் குத்தகை விடப்பட்டது.

     இந்த ஏலத்தில் அனைத்து சமூகத்தைச் சார்ந்த 18 பேர் டேவனித்தொகை செலுத்தி ஏலத்தில் ஈடுபட்டனர். 18 பேர் டேவணித் தொகை செலுத்திய நிலையில் இந்து அறநிலைய ஆட்சித் துறைக்கு சொந்தமான நிலத்தினை 8 பேர் குத்தகைக்கு எடுத்தனர். இந்த நிகழ்வில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.