மதுரை பரவையிலுள்ள மங்கையர்க்கரசி பொறியியல் கல்லூரியில் 5வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் செயலாளர் பி.அசோக்குமார் தலைமையில் இயக்குனர் சக்தி பிரனேஷ் முன்னிலையில் நடைபெற்றது. அனைவரையும் வரவேற்று விழாவை திறம்பட வழிநடத்தினார்.

இந்த பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான சதாசிவம் கலந்து கொண்டுஅண்ணா பல்கலைக்கழக தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற அனைத்து துறை மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும் வழங்கினார். மேலும் கல்லூரியை சார்ந்த 270 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மாணவ மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கி சிறப்புரை ஆற்றினார். பொறியாளர்களே வருங்கால இந்தியாவின் தூண் என்றும் அத்தகைய பொறியாளர்கள் நாட்டின் நலன்கருதி உயர்ந்த சிந்தனையோடும், நேர்மையோடும், முனைப்புடனும், ஆற்றலுடனும் அயராது பாடுபடவேண்டும் என்று கூறினார். மாணவர்கள் தங்கள் துறையில் பிரகாசிக்க தொடர்ந்து புதிய விஷயங்களை அன்றாடம் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் எனவும் இல்லையென்றால் இந்த நவீன தொழில்நுட்ப உலகில் அவர்களால் செயல்படுவது சாத்தியம் இல்லை என்றும் கூறினார். மேலும் அவர் இந்த சமுதாயத்தின் சவால்களை மாணவர்கள் மனதை ஒருநிலையாக வைத்து எதிர்கொள்ள வேண்டும். மாணவர்கள் வெற்றிபெற மன உறுதியையும் சாதிக்க திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் அவர் கூறுகையில் பட்டம் பெரும் மாணவ மாணவியர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி, தலைமைப் பொறுப்புகளையேற்று, சிறப்புமிகுந்த இந்த கல்லூரிக்கு பெருமைசேர்க்கும்படி செயலாற்ற வேண்டும் என்று வாழ்த்தினார்.

இதில் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து உள்ளனர்