சேலம் சேகோவுக்கான புவியியல் குறியீடு சான்றிதழ் சேகோசர்வ் தெற்கு ஆசியாவிலேயே மிக பெரிய தொழிற்கூட்டுறவு சங்கமாகும். சேகோசர்வில் 374 உறுப்பினர்கள் உள்ளார்கள். இந்தியாவிலேயே ஜவ்வரிசிக்கு என்று ஒரே ஒரு விற்பனை கேந்திரமாக சேகோசர்வ் சங்கம் செயல்பட்டு வருகிறது. ஜவ்வரிசியானது ஒரு பாரம்பரியமிக்க ஒரு உணவு பொருளாகும்.ஜவ்வரிசியானது வடமாநில மக்களால் புனிதமிக்க உணவு பொருளாக மிகமுக்கியமான நவராத்திரி, துர்காபூஜா போன்ற திருவிழா காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் சேகோவுக்கான புவியியல் குறியீடு சான்றிதழ், உணவுப் பொருள் வகைப்பாட்டு பிரிவு 30ன் கீழ் பெறப்பட்டுள்ளது. பழனி பஞ்சாமிர்தம், சேலம் வெண்பட்டு. சேலம் மல்கோவா மாம்பழம் மற்றும் திருப்பதி லட்டு போன்ற பிரபலமான தயாரிப்புகளுடன் சேலம் சேகோவும் தற்போது இணைந்துள்ளது. இது சேகோ தயாரிப்பின் தனித்துவத்தையும் நம்பகதன்மையையும் மேம்படுத்தவும், புதிய சந்தை வாய்ப்பை -ருவாக்கவும். சேகோ மற்றும் சேகோ சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் முக்கியதுவம் அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவுகிறது.புவிசார் குறியீடு பெற்றதின் மூலம் ஜவ்வரிசிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால் மரவள்ளிக்கிழங்கு பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்படும் பல்வேறு வகையான மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் மதிப்பும் அதிகரிக்கும். மேலும் ஜவ்வரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அதிகளவில் வாய்ப்பு உள்ளது. இதனால் இந்திய பொருளாதாரமும் மற்றும் உலக பொருளாதாரமும் மேம்படும் நிலை ஏற்படும்.பாரம்பரியமிக்க ஜவ்வரிசிக்கு சேலம் சேகோ (ஜவ்வரிசி) என்ற பெயரில் புவிசார் குறியீடு பெறும் முயற்சியில் ஈடுபட்டு தற்சமயம், சேலம் சேகோ (ஜவ்வரிசி) என்ற புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது. மேற்படி சான்றிதழை பெறும் விழா சேகோசர்வ் சங்கத்தில் நடைபெற்றது. இந்த விழா சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் கார்மேகம் அவர்களின் தலைமையில் ,சஞ்சய்காந்தி, தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருட்களின் நோடல் அலுவலர் அவர்கள் புவிசார் குறியீடு சான்றிதழை வழங்கினார். இவ்விழாவிற்கு லலித்ஆதித்ய நீலம், இ.ஆ.ப., செயலாட்சியர், சேகோசர்வ் அவர்கள் இக்கூட்டத்தை ஒருங்கிணைத்தார். இக்கூட்டத்தில் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சேலம், தோட்டக்கலை இயக்குநர், சேகோசர்வ் சங்க உறுப்பினர்கள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.