சேலம் திருவள்ளுவர் சிலை அருகில் அமைந்துள்ள இந்திய குடியரசு கட்சி கவாய் பிரிவு அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பொண்ணுத்தம்பி செய்தியாளர்களை சந்தித்தார்!
சேலம் திருவள்ளுவர் சிலை அருகே அமைந்துள்ள இந்திய குடியரசு கட்சி (கவாய் பிரிவு) அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பொண்ணு தம்பி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது, சேலம் மாவட்டம் சேலம் வட்டம் குப்பனூர் வெள்ளையம்பட்டி கிராமம் 105/1A,105/2,105/3,105/4 ஆகிய சர்வே எண் உள்ளடங்கிய, ஏடி கண்டிஷன் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு சேர்ந்த நிலத்தை மாற்று இனத்தைச் சேர்ந்த ரத்தினவேல், மாரியம்மாள்,ராஜாமணி,ராஜா, ஆகியோர் 7 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு நிலத்தை அபகரித்துள்ளார்கள், ஆனால் இது நாள் வரை ஆக்கிரமிப்பை அகற்றவில்லை, அரசு அதிகாரிகளிடம் பலமுறை சொல்லியும் பயனில்லை ஆகையால், இதனை வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி கவாய் பிரிவு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 5, 9 ,2023 அன்று நடைபெறும்,மேலும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.