நான் தென்காசி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன் 01 .09. 23 அன்று வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் என்ற ட்விட்டர் ஐடியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஆன வழக்கறிஞர் ராஜா பற்றி அவதூறு பரப்பும் வகையில் அந்த தளத்தில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளது 

சவுக்கு சங்கர் தூண்டுதல் பெயரில் செயல்படும் வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் என்ற அடையாளம் கொண்ட ஐடியில் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார் 

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் குறித்து காவல் ஆய்வாளர் விசாரித்தும் தேசிய மக்கள் நல ஆணையர் விசாரித்தும் அறிக்கையில் எந்த இடத்திலும் சட்டமன்ற உறுப்பினர் பெயர் இடம்பெறவில்லை அவ்வளவு ஏன் சாட்சியாக கூட விசாரணை செய்யாத நிலையில் அவர் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி வருகிறார் இதனால் அரசியல் ஆதாயம் தேடும் நபர்கள் மூலம் பொய் புகார் அளித்து பணம் பறிக்கும் வகையில் அவதூறு பரப்பி வருகிறார் இந்த சம்பவம் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது எனவே இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி எதிர்மனுதாரர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடத்தக்கது

மேலும் வாய்ஸ் ஆப் சவுக்கு சங்கர் என்ற ட்விட்டர் ஐடியில் தென்காசியை சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவர் தலைமறைவாக உள்ளதாக பதிவு செய்யப்பட்டிருந்தது 

ஐடி யில் குறிப்பிட்ட தென்காசி முகமது அலி ஜின்னா என்பவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்து விட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது

ஜாதி மதம் கடந்து மனிதநேயப் பணிகளை முன்னிறுத்தி சமூகப் பணிகளை செய்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர்களையும், மக்கள் மத்தியில் சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கும் சட்டமன்ற உறுப்பினர் ராஜா மீது புகழை கெடுப்பதற்காக, மற்ற அரசியல் கட்சிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இன்றி தவறான கருத்துக்களை சமூக வலைதளங்கள் மூலமாக வெளியிட்ட சவுக்கு சங்கர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நான் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் சமூகப் பணிகளை இன்று வரை செய்து கொண்டு வருந்திருக்கிறேன். 28.08.2023 திங்கட்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நரிக்குறவர்களின் குழந்தைகளின் கல்விக்காக அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்காக வேண்டி மனு அளித்துள்ளேன். மேலும் தென்காசி காவல்துணை கண்காளிப்பாளர் அவர்களையும் நேரில் சந்தித்து நரிக்குரவர்கள் குழந்தைகளுக்காக மனு அளித்துள்ளேன். மேலும் அனைத்து துறை அதிகாரிகளையும் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளேன். ஆனால் என்னை சமூக வலைதளங்களில் முகமது அலி ஜின்னா என்ற நபர் தலைமறைவாக உள்ளார் என்ற தவறான ஒரு செய்தியையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். நேற்று தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் ஆதரவற்று இறந்த நிலையில் இருந்த ஒரு நபரை தென்காசி காவல்துறையுடன் இணைந்து அந்த நபரை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டோம். ஆனால் நான் தலைமறைவாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்கள் மூலமாக பதிவிட்டுள்ளார்.

இதுபோன்று பணத்திற்காகவும், சமூக வலைதளங்களில் ஏற்படும் புகழ் போதைக்காவும் அரசின் மீதும் அரசு அதிகாரிகள் மீதும் சமூக ஆர்வலர்கள் மீதும் தவறான பொய் செய்தியை பரப்புபவர்களுக்கு உரிய தண்டனை ஏற்படுத்திக் கொடுக்காத பட்சத்தில் சமூகத்தில் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தும். ஆதலால் சமூக ஆர்வலர்களை பொதுத்தளத்தில் விமர்சனம் செய்து பொதுமக்களிடையே ஒற்றுமையை குலைக்கும் விதமாக செயல்படுபவர்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.