
இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார்பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது.இந்த விளையாட்டு விழாவிற்கு உறவின்முறை முறைகாரர் ஜெயராஜ் தலைமை தாங்கினார்.அம்பலகாரர் சக்திவேல்முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியை சிந்துமதி விழாவிற்கு வருகை தந்த அனைவரை யும் வரவேற்று பேசினார்.பள்ளியின் செயலர் சங்கர் ஒலிம்பிக் கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைத்தார்.பள்ளியின் மைதானத்தில் இந்த விளையாட்டு போட்டி நடைபெற்றது. ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல்,கபடி உட்பட ஏராளமான போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று சாதனைகள்படைத்தனர். இவ்விழாவில் பள்ளியின் தலைவர் சண்முகராஜ் பாண்டியன்,பொருளாளர் சரவணன்,உறுப்பினர் ஜெகன் உட்பட நிர்வாக குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.உடற்கல்வி ஆசிரியைகள் திருவளர்ச்செல்வி, மீனு பிரியங்கா மற்றும் ஆசிரியைகள் விளையாட்டுப் போட்டி களை கண்காணித்து நடத்தினர்.இதே போல்இப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் கமுதி குறு வட்டார அளவிலான போட்டியில் பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.