தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் பட்டியல் இன மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செட்டியூல்டு கேஸ் சப் பிளான் திட்டத்தின் மூலம் ஒதுக்கி வரும் நிதியினை திருப்பி அனுப்பிய தமிழக அரசை கண்டித்து பிச்சை எடுத்து தமிழக அரசுக்கு நிதி வழங்கும் போராட்டம் நடைபெற்றது.தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாவட்ட தலைவர் ராமர் தலைமையிலும் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பாலகுருநாதன் முன்னிலையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தென்காசி நகர தலைவர் மந்திரமூர்த்தி வரவேற்றுப் பேசினார்.சிறப்பு அழைப்பாளராக பட்டியல் அணியின் மாநில பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன் தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பார்வையாளர் மகாராஜன் வர்த்தக பிரிவு மாநிலச் செயலாளர் கோதை மாரியப்பன், பட்டியல் அணி மாவட்ட பார்வையாளர் திருவாலிபட்டியல் அணிமாவட்ட பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் முருகன்பட்டியல் அணி மாவட்ட பொருளாளர் சுபாஷ், மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமார், சுரண்டை நகர தலைவர் அருணாச்சலம்,கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன் சுரண்டை நகர பார்வையாளர் முருகேசன் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பொருளாளர் தட்சிணாமூர்த்தி விவசாய அணி மாவட்ட தலைவர் முத்து பாண்டியன் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செந்தூர்பாண்டியன்சமூக ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ரங்கராஜ் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் சங்கர சுப்பிரமணியன் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தென்காசி நகர் மன்ற உறுப்பினர் லட்சுமண பெருமாள் இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் விவேக் குமார்மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குமார் முருகேசன் திருமுருகன்தொழில் பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் மகேஸ்வரன்தென்காசி நகர துணைத் தலைவர் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.