கோவை மாவட்டம் பாரதியார் பல்கலைக்கழக மைதானத்தில் கோவை மாவட்ட தடகள சங்கம் நடத்தும் 62வது கோவை மாவட்ட ஜூனியர் தடகளப்போட்டி ஏழாவது மயில்சாமி மற்றும் இரண்டாவது சங்கரன் நினைவு கோப்பைக்கான போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் முருகவேல் கோவை மாவட்ட தடகள சங்க தலைவர் எஸ் மோகன் தாஸ் பொருளாளர் ஜான் சிங்கராயர் செயலாளர் சம்சுதீன் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். துவக்க விழாவில் சுருதி ஏஜென்சிஸ் உரிமையாளர்கள் வித்யாதரன்,சரவண காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ மாணவியர்கள் ஆண்கள் பெண்கள் என போட்டிகளில் பங்கேற்றனர். மேலும் கோவை மாவட்ட தடகள சங்க துணைத் தலைவர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இரண்டு நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை டிரையம்ப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகடாமி தட்டி சென்றது. இரண்டாவது பட்டத்தை அத்லெட்டிக் ஃபவுண்டேஷன் மூன்றாவதாக கோவை அத்லடிக் கிளப் பெற்றனர். மாணவர்களுக்கான சாம்பியன் பட்டத்தை கோவை அத்லெடிக் கிளப் தொடர்ந்து 23 ஆண்டுகளாக பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.ஆண்கள் சீனியர் பிரிவு தடகள போட்டிகளில் முதலாவதாக ஜெனிசியஸ் ஸ்போர்ட்ஸ் அகடாமையும் இரண்டாவது இடத்தை மேற்கு மண்டல காவல்துறை அணியும் பெற்றது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னால் காவல் துறை தலைவர்(தமிழ்நாடு தடகள சங்க தலைவர்) தேவாரம்,சக்தி கல்லூரி துணை தலைவர் தீபன் தங்க வேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாவட்டங்களுக்கி டையிலான மாநிலத் தடகளப் போட்டிகளுக்கு மாணவ மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தடகளப் போட்டிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளை குரு, நந்தகுமார்,இலியாஸ், நிஜாமுதீன்,சிவகுமார் செய்திருந்தனர்