ஆர்.கே. பேட்டை அடுத்த வங்கனூர் காலனியில் வசிப்பவர் தியாகராஜன். (47) இவர் திருத்தணி அடுத்த கே.ஜி. கண்டிகையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலன் மற்றும் மாணவர் விடுதியில் இரவு காவலராக பணியாற்றி வருகிறார். இவரோடு விடுதியின் சமையலர் கோபிநாத் என்பவரும் பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை4. மணி அளவில் தியாகராஜன் கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை.
அறையை விட்டு வெளியே வந்து சமையலர்கோபிநாத் பார்த்தபோது வராண்டாவில் தியாகராஜன் இறந்து சடலமாக கிடக்கிறார். இதனால் அதிர்ச்சடைந்த சமையலர் கோபிநாத் விடுதி அதிகாரிகள் மற்றும் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் அதிகாலையில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுவிஷயமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இறந்து போன இரவு காவலர் தியாகராஜனுக்கு பன்னீர் செல்வி என்ற மனைவியும் தனுஸ்ரீ கோகுல்ராஜ் ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.