வேலூர் மாவட்டம் ,வேலூர் கஸ்பா ,அப்துல்கலாம் நகர் ,முபாரக் திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் கழக பவள விழாவினை முன்னிட்டு வேலூர் கஸ்பா பிரண்ட்ஸ் கேரம் கிளப் சார்பில் இரட்டையர் பேஸ்கேம் கேரம் போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன் அவர்கள் பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ம.ப.அன்புநிதி , தமீம் (என்கிற) நிவாஸ் வி.சி.க. மாவட்ட பொறுப்பாளர் ,சுதாகர் ராஜா ,நரேஷ் ,மஸ்தான், பாஜா ,சந்தோஷ், வேலு ,சுதாகர், ரியாஸ் ,பாபு, அசோக் ,மணி, திலீப் ,சாம்சங், குட்டி உள்ளிட்டடோர் பலர் கலந்து கொண்டனர்.