
புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலை செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் மோகன், உதவி ஆய்வாளர் சிட்டிபாபு, குமரவேல், விஜயக்குமார், பூபாலன் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுச்சேரி மதுபானங்களை ரயிலில் கடத்தி வந்த துத்துக்குடியை சேர்ந்த சுடலை (23) என்ற இளைஞரை கைது செய்து அவரிடம் இருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 36 பாட்டில் மதுபானங்களை பறிமுதல் செய்து நடவடிக்க முதல் கட்ட விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தில் மதுபானங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதால் அந்த மதுபானங்களை ரயிலில் கடத்தி வந்து செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதை தொழிலாக வைத்துள்ளார் சுடலை இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மதுவிலக்கு போலீசாரிடம் மதுபானம் கடத்தி வந்த சுடலை மற்றும் மதுபானங்களை ஒப்படைத்தனர்.வெளி மாநிலங்களில் இருந்து வெளி மாவட்டங்களில் இருந்து வரும் விரைவு ரயிலில் தங்கம், கஞ்சா, மதுபானம் போன்றவை கடத்தி செல்வதாக தொடர்ந்து செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்புபடை போலீசார்க்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. அதன் அடிப்படையில் தினமும் ரயிலில் சோதனை நடவடிக்கை தீவிரபடுத்தியுள்ளதாக ரயில்வே பாதுகாப்புபடை போலீசார் தகவல் தெரிவித்தனர்.