சென்னை.அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் நர்மதா நந்தகுமார். சமூக  ஆர்வலரான இவர் கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு, காவேரி பிரச்சனை, குடிமராமத்து திட்டம் போன்ற பணிகளுக்காக  சமூக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறார். இதில் ஒரு பகுதியாக ஆருத்ரா நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடமிருந்து ரூ. 2438 கோடி முறைகேடு நடைபெற்றதாகவும் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டி நிதி மோசடியில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கூட்டாளி பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் மீது நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் செலுத்த வேண்டியும் .

திருத்தணி முருகன் கோயில் சரவண பொய்கை திருக்குளம் பகுதியிலிருந்து திருத்தணி நகர முக்கிய வீதிகள் வழியாக  நர்மதா நந்தகுமார மகாத்மா காந்தி வேடமிட்டு நடை பயணம்  மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.