அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், அரியலூர் மாவட்ட அளவிலான  அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா,   அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் .கு.சின்னப்பா அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அன்றாட வாழ்வில் உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடற்தகுதி கலாச்சாரத்தை இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அறிஞர் அண்ணா நெடுத்தூர ஓட்டப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய இந்நிகழ்ச்சியில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் .ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் .கண்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் .ந.லெனின், மாணவ, மாணவியர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.