திருத்தணி அரக்கோணம் சாலையில் இயங்குகிறது பீகாக் மருத்துவமனை. இதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம். ஸ்ரீ கிரண் மருத்துவமனை மருத்துவ குழுவினர்களோடு அவ்வப்போது கிராமங்களை தேடி ஏழை பொதுமக்கள் பயனடையும் வகையில்இலவச மருத்து முகாம்களை நடத்தி வருகிறார். இதுவரைக்கும் 200 மருத்துவ முகாம்கள் நடத்தி 201ஆவது இலவச மருத்துவ முகாமை. திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் கிராமத்தில் நடத்தினர். டாக்டர்கள் பன்னீர்செல்வம். சாய்நாத் .மற்றும் செவிலியர்கள் உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச சிகிச்சைகள் வழங்கினர். இரத்த பரிசோதனை. சர்க்கரை நோய் .மற்றும் பொது மருத்துவம் குறித்து பரிசோதனை ஆலோசனைகள் வழங்கி மருந்து மாத்திரைகளையும் இலவசமாக வழங்கினர்