மதுரை கோ.புதூர் அல் அமீன் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி நிர்வாகி முகமது இதிரிஸ் தலைமையில் தலைமையாசிரியர் ஷேக் நபி  உதவித் தலைமையாசிரியர் ரஹ்மத்துல்லா ஆகியோர் முன்னிலையில்

மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

மதுரை கிழக்கு மண்டலத் தலைவர் வாசுகி சசிகுமார், 12வது வார்டு மாமன்ற உறுப்பினர் இராதா மணிமாறன், மாநில தீர்மானக்குழு செயலாளர் அக்ரி கனேசன், மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ராகவன், 12வது வார்டு வட்டச் செயலாளர் மருது, 10வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆழ்வார் மற்றும் அணித்தலைவர், பகுதிச்செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேசிய அளவிலான ஜூடோ போட்டிக்கு (SGFI) தேர்வுபெற்ற மாணவர் கிஷார் குமார் மற்றும் 11ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு வேலைவாய்ப்புத்திறன்கள் பாடத்தில் 100 / 100 மதிப்பெண் பெற்ற மாணவர் மாதவன் ஆகியோருக்கு நிலா டெக்ரேட்டர்ஸ் மன்சூர் அவர்கள் ஊக்கத்தொகை வழங்கினார். தொழிற்கல்வி ஆசிரியர் முகைதீன் பிச்சை நன்றி கூறினார். தமிழாசிரியர் தௌபீக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

அதனை தொடர்ந்துமதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதூர் பகுதியில் கிராம வர்ம நகரில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 15 லட்சம் மதிப்பீட்டு புதியதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளது.இதனை வடக்கு சட்டமன்ற  உறுப்பினர் கோ தளபதி திறந்து வைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.இந்நிகழ்வில் மண்டல தலைவர் வாசுகி சசிகுமார் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அந்தோணியம்மாள் மாநகராட்சி உதவி ஆணையாளர் உதவி பொறியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.