திருவண்ணாமலை ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார்(41) மற்றும் வெங்கடேசன்(51) ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேசிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டதாவது: திருவண்ணாமலை செங்கம் ரோடு பகுதியில் வசித்து வரும் துக்கார மகன் சீனிவாசன் என்பவரிடம் தல ரூ.6 லட்சம் கொடுத்து அரசு கலைக் கல்லூரி அருகே வீட்டு மனையை வாங்கினோம். இந்த இடத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை பட்டா மாற்றம் பெயர் மாற்றம் ஆகியவற்றை முன் நின்று நானே செய்து தருகிறேன் என உறுதி கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த இடத்தில் வீடு கட்ட முடிவு செய்து ரூ.30 லட்சம் செலவில் கட்டடம் கட்டினோம். இந்நிலையில் இந்த இடம் அரசு புறம்போக்கு இடம் என்ன வருவாய்த்துறையினர் கட்டடத்தை தரைமட்டமாக இடித்தது  விட்டனர். இதுகுறித்து சீனிவாச இடம் கேட்டபோது கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுகிறார். மேலும், மாற்றிடம் அல்லது கொடுத்த தொகையை திருப்பிக் கொடுக்கும் படி கேட்டபோதும் கொலை மிரட்டல் விடுகிறார். எனவே, இவர் மீது நடவடிக்கை எடுக்கவும். இழந்த பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.